தேடுதல்

நெறிகாட்டும் ஆளுமைகள் நெறிகாட்டும் ஆளுமைகள்  

நெறிகாட்டும் ஆளுமைகள்

மனிதம் காயப்படும்போது, கடவுளின் இதயமும் காயப்படுகிறது; அநீதியின் வலியில் இறைவனும் உடனிருக்கிறார்.

மனிதம் காயப்படும்போது கடவுளும் காயப்படுகிறார்

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஓய்வுபெற்ற அதிகாரியான திரு. எட்வர்ட் மோசஸ் அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவர். இராணுவத்தில் பணியாற்ற விரும்பிய தனது ஒரே மகனான ராபர்ட் மோசஸை பெருமையுடன் இராணுவப் பணிக்கு அனுப்பி வைத்தார். ஒருநாள் அதிகாலை அவருக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது. போர்முனையில், தனது சக அதிகாரியால் நயவஞ்சகமாக அவரது மகன் ராபர்ட் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். தனது நெருங்கிய நண்பரிடம் கண்ணீர் மல்க:“அப்படியானால், கடவுள் எங்கே? நான் வணங்கும் அந்தக் கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டார் அப்போது அவரது நண்பர் கண்ணீருடன் “அந்தக் கடவுளும் அங்கேயே, உங்கள் மகனோடு கொல்லப்பட்டுவிட்டார்” என்று பதிலளித்தார்: இந்த வார்த்தைகள் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. மனிதம் காயப்படும்போது கடவுளும் காயப்படுகிறார்; மனித மாண்பும் மதிப்பீடுகளும் அவமதிக்கப்படும்போது கடவுளும் அவமதிக்கப்படுகிறார். அநீதி செய்யப்படும் இடத்தில் கடவுள் அமைதியாக இருப்பதில்லை; பாதிக்கப்பட்டவர்களின் வலியில் அவரும் பங்கேற்கிறார்.

மனிதனைத் துன்புறுத்துவதும், நீதியை உதறித் தள்ளுவதும், மனித மாண்பைக் கொல்வதும் இறைவனின் மதிப்பையே காயப்படுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 14:50