நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  

நெறி காட்டும் ஆளுமைகள்

தனிமை ஒருவரை உடைக்கவும் முடியும்; உயர்த்தவும் முடியும். நல்ல நூல்களைத் துணையாகத் தேர்ந்தெடுத்தால், தனிமையே வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாறும்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

தனிமையை வெற்றியாக மாற்றிய நெல்சன் மண்டேலா

கருப்பர் இன விடுதலைப் போராட்டத்தின் மகத்தான தலைவர் Nelson Mandela அவர்களிடம் ஒரு நிருபர் கேட்டார்: "27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அந்த நீண்ட காலத்தை எப்படி தாங்கிக் கொண்டீர்கள்?" அதற்கு நெல்சன் மண்டேலா அளித்த பதில் மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது: "அந்த ஆண்டுகளில் நான் ஒருபோதும் தனியாக இல்லை. மகாத்மா காந்தியின் சத்திய சோதனை நூலுடன் மனம் திறந்து உரையாடிக் கொண்டிருந்தேன். அந்த வாசிப்பே என்னை மன உறுதியுடன் வாழ வைத்தது."

இந்த நிகழ்வு நமக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்துகிறது. தனிமை ஒருவரை உடைக்கவும் முடியும்; உயர்த்தவும் முடியும். அது நாம் எதைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதையே பொறுத்தது. நல்ல நூல்களை வாசிக்கத் தொடங்கினால், தனிமை ஒரு சுமையாக இருக்காது; அது நம் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாறும். வாசிப்பு நம் சிந்தனையை விரிவுபடுத்தும், மன உறுதியை வளர்க்கும், வாழ்விற்கு புதிய திசையைக் காட்டும். தனிமையை நீங்கள் அனுமதித்தால், அது உங்களுக்கு உற்ற துணையாக மாறும். வாசிப்பை நீங்கள் நேசித்தால், அது உங்களை வளர்ச்சிப் பாதையில் நடத்தும். நல்ல நூல்கள் உங்கள் கைகளில் இருந்தால், உங்கள் வாழ்க்கை வரலாற்றில் அழியாத தடத்தைப் பதிக்காமல் விடாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஆகஸ்ட் 2026, 15:28