கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

வரலாற்றை மாற்றியவர்களின் வார்த்தைகளைப் போல, நமது பேச்சும் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச

சிலரது பேச்சுகளில் சரித்திரமே திசைமாறியிருக்கிறது;
நிறுவப்பட்ட உண்மைகள் புதிய வடிவம் பெற்றிருக்கின்றன.

சாக்ரடீஸ் பேசினார் – சிந்தனை உலகம் சீர்பெற்றது. கலிலியோ பேசினார் – அறிவியல் விழித்தெழுந்தது. ஐன்ஸ்டீன் பேசினார் – அணுக்களின் ஆற்றல் உலகை வியக்க வைத்தது. கரிபால்டி பேசினார் – இத்தாலியில் புரட்சி வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பேசினார் – அடிமைத்தனத்தின் அடித்தளம் தகர்ந்தது.
மார்ட்டின் லூதர் கிங் பேசினார் – நிறவெறிக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
வால்டேர் பேசினார் – மதத்தலைவர்கள் மிரண்டு போனார்கள்; மூடத்தனங்கள் முற்றுப்புள்ளியை நோக்கின. காந்தி பேசினார் – அந்நிய ஆட்சியை அகிம்சை வென்றது. பெரியார் பேசினார் – சமூக ஆதிக்கங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
அண்ணா பேசினார் – தமிழ் மொழியும் இன உணர்வும் எழுச்சி பெற்றன.
அம்பேத்கர் பேசினார் – அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது.
இயேசுநாதர் பேசினார் – ஏழைகள் ஏற்றம் பெற்றனர்; விண்ணகத்தைத் தங்கள் உரிமையாகக் கொண்டனர்.

அப்படியானால்,
எதை மாற்றப் போகிறது உங்கள் பேச்சு?

பாருங்கள்... பார்த்துக்கொண்டே இருங்கள்!
இது தொலைக்காட்சிகளின் ஒளி உலகம்.

கேளுங்கள்... கேட்டுக்கொண்டே இருங்கள்!
இது வானொலிகளின் ஒலி உலகம்.

தேடுங்கள்... தேடிக்கொண்டே இருங்கள்!
இது அலைபேசிகளின் தொடுதிரை உலகம்.

ஆனால், உங்கள் பேச்சு எதை நோக்கியது?
உங்கள் வார்த்தைகள் எதை மாற்றப் போகின்றன?
உங்கள் குரல் யாருடைய வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறது?

இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஆகஸ்ட் 2026, 15:26