தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

நட்பைத் தேர்ந்தெடுப்பதில் விவேகம் அவசியம்; நல்லோரின் நட்பு நல்வழியைக் காட்டும். கல்வியும் நல்லறிவும் மனிதனை உயர்த்தும் அழியாச் செல்வங்களாகும்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

இன்று நாம் 'சிறுபஞ்சமூலம்' என்ற நூலில் காரியாசான் (அல்லது நல்லாதனார்) இயற்றியுள்ள மூன்றாம் செய்யுளைப் பற்றிச் சிந்திக்கவிருக்கிறோம். மனிதனின் அறியாமையால் ஏற்படும் மூன்று கேடுகளைப் பற்றி இந்தச் செய்யுள் நமக்கு விரிவாக எடுத்துரைக்கிறது.

  1. கல்லாதவரோடு நட்பு பாராட்டுதல்.
  2. தவறான நாள்களை (சோதிடம்/நாட்காட்டி பார்த்து) நம்பிச் செயல்படுதல்.
  3. சிறுமை குணம் (நற்பண்புகள் இல்லாத) படைத்தவர்களை வீட்டிற்குள் அழைத்து உபசரித்தல்.

இந்த மூன்றில் முதலாவதாகவும் முதன்மையாகவும் அவர் குறிப்பிடுவது, கல்வி அறிவு இல்லாதவர்களோடு நட்பு பாராட்டுவதாகும். கல்லாமை என்பது ஒரு மனிதனுக்கு ஏற்படும் மிகப்பெரிய தீங்காகும். படிக்க முயற்சி செய்யாமலும், அறிவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமலும் இருக்கும் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வது, அறியாமையினால் நமக்கு நாமே வரவழைத்துக் கொள்ளும் கேடாகும். இதனைத் தான் திருவள்ளுவரும், "கல்லாதான் வெட்பம் கழிநன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" என்கிறார். அதாவது, கல்லாத ஒருவன் தற்காலிகமாக ஒரு நல்ல கருத்தைக் கூறினாலும், அதனை அறிவுடையவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? உள்ளே அறிவோ, நற்பண்புகளோ இல்லாதபோது அவரிடமிருந்து நிலையான நன்மைகளை எதிர்பார்க்க முடியாது என்பதை அறிவுடையவர்கள் நன்கு அறிவர்.

விவிலியத்தில் இயேசு பெருமான், "என்னிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார். அதே வேளையில், நாம் இயற்கையிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். பறவைகள், வயல்வெளி மலர்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல; நூலகங்களுக்குச் சென்று பல நூல்களைப் படிப்பதும், இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் இரகசியங்களைப் புரிந்துகொள்வதுமே உண்மையான கல்வியாகும். சான்றோர்கள் தங்கள் இலக்கியங்கள் வழியாக நமக்குத் தந்துள்ள நற்கருத்துக்களை நம் வாழ்வில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். விலங்குகளால் படிக்க இயலாது; ஆனால், மனிதர்கள் முழுமையான மனிதர்களாக வாழ்வதற்கு கல்வி அறிவு இன்றியமையாதது. ஒரு காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் காரணமாக, "நீ படிக்கக் கூடாது, படித்தால் உன் நாவை வெட்டுவேன்; படிப்பதை காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவேன்" என்றெல்லாம் கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்தன. ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது.

இறுதியாக, இன்றைய காலகட்டத்தில் நாம் 'நண்பன்', 'தோழி' அல்லது 'தோஸ்த்' (Friend) என்று பல பெயர்களில் நட்பைக் கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட நட்பை தேர்ந்தெடுப்பதில் விவேகம் தேவை.

நன்றி, வணக்கம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூன் 2026, 12:25