தேடுதல்

நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  

நெறி காட்டும் ஆளுமைகள்

அணுவைத் துளைத்து அண்டங்களையே அழிக்க நினைக்கும் மனிதனுக்கு ஐன்ஸ்டீன் முன்வைத்த சவால் இதுதான்: "அணுவை அழிக்கும் நீ, உன்னால் ஒரு புத்தம் புதிய தூசியையாவது படைத்துக் காட்ட முடியுமா?"

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஜெர்மனியில் பிறந்த மாபெரும் இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரது கண்டுபிடிப்புகளே அணுசக்திக்கு அடிப்படையாக அமைந்தன. அமெரிக்க அதிபர் ட்ரூமன் காலத்தில், அந்த அறிவியல் சூத்திரங்களைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்கள், மனித வரலாற்றின் தீராத வடுக்களாக மாறின. அந்தப் பேரழிவைக் கண்டு ஐன்ஸ்டீன் நிலை குலைந்து போனார்.

ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம் கேட்டார்கள்: "உலகம் போற்றும் விஞ்ஞானியாக நீங்கள் சாதனை படைத்துவிட்டீர்கள். ஒருவேளை நீங்கள் மீண்டும் பிறக்க நேர்ந்தால், ஒரு விஞ்ஞானியாகவே பிறக்க விரும்புவீர்களா?" ஐன்ஸ்டீனிடமிருந்து வந்த பதில் மிகவும் தெளிவானது, அதேசமயம் வலி நிறைந்தது:

இல்லை! ஒருவேளை நான் மறுபடியும் பிறக்க நேர்ந்தால், ஒரு விஞ்ஞானியாகப் பிறக்க மாட்டேன். ஒரு சாதாரணக் குழாய் செப்பனிடுபவராக (Plumber) பிறக்கவே விரும்புகிறேன்.

அவர் தொடர்ந்து, "அணுவின் சக்தியை உலகிற்கு நான் காட்டியிருக்கலாம். ஆனால், அந்த மகா சக்தியின் சாவி இன்று என் கையில் இல்லை. அது ஆட்சியாளர்களின் கையில் சிக்கி, உலகைச் சின்னாபின்னமாக்கி வருகிறது. என் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு இவ்வளவு துன்பத்தைத் தந்துவிட்டதே என்று என் மனம் வெகுவாக வருந்துகிறது. இந்தப் பூமியில் நான் ஒரு 'துன்புற்ற மனிதனாகவே' விடைபெறுகிறேன்” என்று சொன்னார்:

அணுவைத் துளைத்து அண்டங்களையே அழிக்க நினைக்கும் மனிதனுக்கு ஐன்ஸ்டீன் முன்வைத்த சவால் இதுதான்: "அணுவை அழிக்கும் நீ, உன்னால் ஒரு புத்தம் புதிய தூசியையாவது படைத்துக் காட்ட முடியுமா?" ஒரு நாட்டை வல்லரசாக்குவது என்பது அங்கு குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் அல்ல; மாறாக மக்களிடையே நிலவும் அன்பும், அனுசரணையும் மட்டுமே.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2026, 14:45