கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

பொருள்கள் மட்டுமே நிரம்பிய வீட்டிலே பொருள் இருக்காது, பொறுமை இருக்காது, அருள் இருக்காது, ஆன்மீகமும் இருக்காது.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

அன்பான அணில் குடும்பம் ஒன்று இருந்தது. அப்பா அம்மா மூன்று குட்டி அணில்கள் இனிதே வாழ்ந்து வந்தன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளை கொஞ்சி அன்பு மொழி பேசுவார் அனில் அப்பா. ஒரு நாள் இந்த சிறிய வீடு வசதி என் பிள்ளைகளுக்கு போதாது, இனி கடுமையாக உழைக்க வேண்டும்.,  பெரிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும் வசதி வாய்ப்புகளை எல்லாம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசித்தார். அதற்காக உழைப்பேன் என்ற எண்ணமும் கொண்டு வாழ்ந்தார்.  இவ்வாறு கவலை கொண்ட அப்பா கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். இரவு பகலாக ஓடி ஓடி உழைக்க ஆரம்பித்தார். செல்வங்களைக் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தார். அரண்மனை போலானது அணில் வீடு. விலை உயர்ந்த புழங்கு பொருள்களோடு அனுதின அன்றாட அறுசுவை உணவோடு ராஜ வாழ்க்கை ஆனது அணில் வீடு. ஆனால் முன்புபோல் இல்லை அனில் அப்பா. அம்மாவிடம் அன்பு காட்டுகிறது இல்லை. பிள்ளைகளிடம் கொஞ்சி பேசுவதில்லை. அதற்கெல்லாம் அவருக்கு நேரமும் இல்லை. வாடி போனார்கள் வாண்டுகள். அப்பாவின் அன்புக்காக ஏங்கிப் போனார்கள்.

ஏங்கிய மனதோடு ஒருநாள் முறையிட்டார்கள். முன்பு போல் நீங்கள் எங்களோடு பாசமாய் விளையாடுகிறது இல்லையே என்று அப்பாவிடம் கேட்டார்கள். முறையிட்டவர்களிடம் முறைத்து நின்றார் அனில் அப்பா. எங்களால் உங்களோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தால் காசு பணம் எப்படி சேர்ப்பது? இது செயற்கை நுண்ணறிவு காலம். தேவையான பொருள்களை ஓடி தேடி சேர்க்க வேண்டாமா?  உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டாமா? என்று சொல்லி அவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டார் அனில் அப்பா. கத்தி விரட்டிய களைப்பில் தொங்கி போனார் அப்பா. கூடி பேசின குஞ்சுகள் முடிவெடுத்தன. அம்மாவிடம் போய் நின்றன. தங்கள் கோரிக்கையை முன் வைத்தன. அம்மா அவர் எவ்வளவோ பொருள்களை வாங்கி வந்து குவிக்கிறார். அப்படியே எங்களுக்கு ஒரு அன்பான அப்பாவையும் வாங்கி வரச் சொல்லுங்கள். பொருள்கள் மட்டுமே நிரம்பிய வீட்டிலே பொருள் இருக்காது, பொறுமை இருக்காது, அருள் இருக்காது, ஆன்மீகமும் இருக்காது. வசதியான அப்பா, அன்பான அப்பா இதில் எதற்காக உன் வீட்டில் அதிக ஓட்டம்? 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஏப்ரல் 2026, 12:48