தேடுதல்

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் குழந்தை   (AFP or licensors)

தெற்கு சூடானில் 4,50,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு!

தெற்கு சூடானில், மனிதாபிமான உதவிகளுக்கான அணுகல் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாலை, நதி மற்றும் விமானப் பயணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு மாவட்டங்கள் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை உணவு தீர்ந்து போகும் நிலையை எட்டியுள்ளதாகவும் யுனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தெற்கு சூடானில், குறிப்பாக ஜோங்லீ மாநிலத்தில், அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை சீர்குலைத்து, சமூகங்களை இடம்பெயர்த்து, அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக, 4,50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது யுனிசெஃப்  நிறுவனம்.

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்த மோதல்கள் குறைந்தது 2,50,000 மக்களை, முக்கியமாக மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளன என்றும் தெரிவிக்கிறது அந்நிறுவனம்.

மனிதாபிமான உதவிகளுக்கான அணுகல் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாலை, நதி மற்றும் விமானப் பயணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு மாவட்டங்கள் கடுமையாக ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை உணவு தீர்ந்து போகும் நிலையை எட்டியுள்ளதாகவும் யுனிசெஃப் உரைக்கிறது.

"இந்த மோதலால் நாடு முழுவதும் 17 நலவாழ்வு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன” என்றும், “மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துப் பொருள்கள் சூறையாடப்பட்ட பல சம்பவங்களும் நடந்துள்ளன” என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

"இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், யுனிசெஃப் ஜோங்லீ மாநிலம் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால நலவாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் நீர் விநியோகங்களை வழங்கியுள்ளது" என்றும், "அதேவேளையில், போர்களை உடனடியாக நிறுத்தவும் மனிதாபிமான பணியாளர்களுக்குப் பாதுகாப்பான அணுகலை வழங்கவும் வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2026, 12:55