தேடுதல்

காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்  

தென்கிழக்கு ஆசியாவில் காலநிலை பேரழிவுகளால் குழந்தைகள் பாதிப்பு!

தென்கிழக்கு ஆசியாவில் இயற்கைப் பேரிடர்களால் ஏறத்தாழ 41 இலட்சம் அளவிற்கு குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், வியட்நாமில், தற்போது 4,80,000 மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அண்மைய மாதங்கள் மற்றும் வாரங்களில், இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சூறாவளி, வெள்ளம் மற்றும் புயல்களின் பேரழிவால் குழந்தைகள் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியுள்ளது யுனிசெப் நிறுவனம்.

டிசம்பர் 05, இவ்வெள்ளியன்று அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம் இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 41 இலட்சம் அளவிற்கு குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், வியட்நாமில், தற்போது 4,80,000 மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளது.

அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பற்ற தண்ணீரைக் குடிக்கிறார்கள், ஒரு முறை அல்ல, பல முறை சேதப்படுத்தப்பட்ட வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் மீண்டும் கட்டியெழுப்ப தங்கள் பெற்றோர் போராடுவதை பார்க்கிறார்கள், மேலும் அவர்கள் பல நாட்கள் அல்ல, வாரக் கணக்கில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 டிசம்பர் 2025, 08:53