புனித பேதுருவின் காணிக்கை: திருத்தந்தையின் உலகளாவிய பணிக்கு ஆதரவளிக்க அழைப்பு!
ஆண்டுதோறும் நடைபெறும் புனித பேதுருவின் காணிக்கை (Peter's Pence) திரட்டலின் வாயிலாக, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் திருத்தந்தையின் உலகளாவிய அமைதி, நம்பிக்கை மற்றும் இரக்கப் பணிகளுக்கு ஆதரவளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆண்டுதோறும் நடைபெறும் புனித பேதுருவின் காணிக்கை (Peter's Pence) திரட்டலின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள், திருத்தந்தையின் உலகளாவிய அமைதி, நம்பிக்கை மற்றும் அன்புப் பணிக்கு தங்களது பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டுள்ளனர். சிறிய தொகையாக இருந்தாலும், புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையின்மீது கொண்டுள்ள அன்பையும் நம்பிக்கையையும் காணிக்கையின் மூலம் வெளிப்படுத்துமாறு திருஅவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
26 ஜூன் 2026, 12:45