வெளிப்படையான நிதி நிர்வாகம்: வத்திக்கானின் உறுதியான கண்காணிப்பு மற்றும் உலகளாவிய ஈடுபாடு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கண்காணிப்பு மற்றும் நிதித் தகவல் ஆணையத்தின் (ASIF) 2025 ஆம் ஆண்டு அறிக்கை, பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கான நிதி உதவியைத் தடுப்பதில் வத்திக்கானின் நிதி மேற்பார்வை அமைப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமான மதம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையுடன், பெருகிவரும் அனைத்துலக அமைப்புகளின் ஒத்துழைப்பையும் இந்த ஆணையம் அடிக்கோடிட்டுகாட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில், இந்த ஆணையத்திற்கு 78 சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன. நிதி புலனாய்வுத்துறையின் முக்கிய பங்களிப்பைத் தொடர்ந்து, இதில் 16 வழக்குகள் நீதித்துறை மேம்பாட்டு அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் ஏறத்தாழ €522,000 மதிப்பிலான மூன்று பரிவர்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்திருப்பது, நிதிப் புழக்கம் குறைந்துள்ளதை உணர்த்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு ஒத்துழைப்பு கணிசமாக வலுவடைந்தது, திருப்பீட அதிகாரிகளுக்கு இடையே அதிகரித்த தகவல் பரிமாற்றம் மற்றும் வத்திக்கான் நகரத்தின் இராணுவத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. உலகளாவிய அளவில், கண்காணிப்பு மற்றும் நிதித் தகவல் ஆணையம் வெளிநாட்டு நிதி புலனாய்வுப் பிரிவுகளுடன் 35 பரிமாற்றங்களை மேற்கொண்டது, இது பரந்த உலகளாவிய ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இந்த ஆணையம் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் திருஅவையின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை, பொறுப்பான நிதி நிர்வாகத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. மதப் பணிகளுக்கான நிறுவனத்தின் ஆய்வுகள், முறையான உதவிகளை வழங்கும் அதே வேளையில் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
உலகளாவிய நிதி மேற்பார்வை அமைப்புகளின் வரவிருக்கும் மதிப்பீடுகளுக்கு வத்திக்கான் தயாராகி வரும் நிலையில், சான் மரினோ நிதி புலனாய்வு ஆணையத்துடனான ஒத்துழைப்பு உள்பட வலுவான அனைத்துலக கூட்டாண்மைகளையும் இந்த அறிக்கை முன்னிலைப்படுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்