தேடுதல்

வெனிஸ் பியன்னாலேவில் உரையாற்றிய பட்டி ஸ்மித் வெனிஸ் பியன்னாலேவில் உரையாற்றிய பட்டி ஸ்மித் 

வெனிஸ் பைனாலேவில் (Venice Biennale) திருப்பீடத்தின் இரண்டாவது காட்சிக்கூடம் திறப்பு

பிங்கனின் புனித ஹில்டெகார்ட் என்ற புனிதரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு “செவியே ஆன்மாவின் கண்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், பார்வையாளர்களைத் தியானம், அமைதி மற்றும் செவிமடுத்தல் ஆகியவற்றின் மூலம் அருள்வாழ்வை புதுப்பிக்க அழைக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 61-வது வெனிஸ் பைனாலே விழாவில், வெனிஸில் உள்ள புனித சகாய அன்னை வளாகத்தில் திருப்பீடம் தனது இரண்டாவது காட்சிக்கூடத்தைத் திறந்துள்ளது. இந்த அரங்கில் கன்னரேஜியோ மாவட்டத்தில் உள்ள கார்மேல் சபைத் துறவிகளின் ஆன்மீகத் தோட்டமும் இடம்பெற்றுள்ளது.

பிங்கனின் புனித ஹில்டெகார்ட் என்ற புனிதரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு “செவியே ஆன்மாவின் கண்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், பார்வையாளர்களைத் தியானம், அமைதி மற்றும் செவிமடுத்தல் ஆகியவற்றின் மூலம் அருள்வாழ்வை புதுப்பிக்க அழைக்கிறது.

இங்குள்ள புனித சகாய அன்னை திருத்தலம் ஒரு “நவீன எழுத்துக்கூடமாக” (contemporary scriptorium) செயல்பட உள்ளது. இங்கு திரைப்பட இயக்குனர் அலெக்சாண்டர் குளூஜ் அவர்களால் ஈர்க்கப்பட்ட 24 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திறப்பு விழாவில் கர்தினால் ஜோஸ் டோலெண்டினோ டி மென்டோன்சா, முதுபெரும்தந்தை பிரான்செஸ்கோ மொராக்லியா, பைனாலே அரசுத் தலைவர் பியத்ராஞ்சலோ புட்டாஃபுவோகோ மற்றும் வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ ஆகியோர் கலந்து கொண்டனர். பாடகியும் மற்றும் பாடலாசிரியருமான பட்டி ஸ்மித் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு “சோனிக் பிரேயர்” (Sonic Prayer) என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

இன்றைய இரைச்சல் நிறைந்த சமூகத்திற்கு அமைதி மற்றும் சிந்தனையின் மூலம் இந்த காட்சிக்கூடம் பதிலளிப்பதாக தெரிவித்த கர்தினால் டோலெண்டினோ அவர்கள், "இது படைப்பில் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பை எதிரொலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதுபெரும்தந்தை மொராக்லியா அவர்கள், " உண்மையான நல்லிணக்கம் என்பது அமைதி மற்றும் கூர்மையாக செவிமடுப்பதன் மூலமாகவே பிறக்கிறது" என்றும், "இவை ஹில்டெகார்ட்டின் ஆன்மீகம் மற்றும் பெனடிக்டைன் பாரம்பரியம் ஆகிய இரண்டிற்கும் மையமான கருப்பொருள்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 13:23