தேடுதல்

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில்   (ANSA)

வத்திக்கான் மற்றும் இஸ்ரேல் இடையே முக்கிய உடன்பாடு!

எருசலேமில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு திருவழிபாடுகளின் போது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கிய தலைவர்கள் இயேசுவின் புனித கல்லறைக் கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதரைச் சந்தித்துப் பேசினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

எருசலேமில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு திருவழிபாடுகளின் போது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கிய தலைவர்கள் இயேசுவின் புனித கல்லறைக் கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதர் யாரோன் சைடுமேன் அவர்களை மார்ச் 30, திங்களன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா  மற்றும் அருள்பணியாளர் பிரான்செஸ்கோ ஆகியோர் இயேசுவின் புனித கல்லறைக் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது இஸ்ரேலிய காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

மேலும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் இந்தச் சந்திப்பின்போது கர்தினால் பரோலின் அவர்களுடன் உடன் இருந்தார்.

எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் என்றும், எதிர்வரும் உயிர்ப்புப் பெருவிழா திரு வழிபாடுகளில் மக்கள் தடையின்றிப் பங்கேற்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 மார்ச் 2026, 13:03