தேடுதல்

திருப்பலியில் மறையுரை வழங்கும் கர்தினால் பரோலின் திருப்பலியில் மறையுரை வழங்கும் கர்தினால் பரோலின்   (@Vatican Media)

அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது!

"மோதல்களுக்கு மத்தியிலும் மனத்தாழ்மை, சேவை மற்றும் மனித மாண்பிற்கு மரியாதை செலுத்தும் செயல்கள் வீரர்களுக்குத் தேவை" என்று உரோமையிலுள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியின் மறையுரை ஒன்றில் கூறினார் கர்தினால் பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருஅவை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது" என்றும், இது பலவீனமான அல்லது நடைமுறைக்கு மாறான அமைதி அல்ல, மாறாக நீதி, திறந்த உரையாடல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பொறுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று" என்று கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் இராணுவக் கத்தோலிக்கத் திருஅவை நிர்வாகத்தின் 100-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மார்ச் 3, செவ்வாய்க்கிழமையன்று, உரோமையிலுள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.

தனது மறையுரையில், அமைதிக்காக இறைவேண்டல் செய்த கர்தினால் பரோலின் அவர்கள், "இயேசு ஆண்டவர் ஆயுதங்களை மௌனமாக்கி மனிதகுலத்தை ஒப்புரவுக்கு உள்ளாக்கட்டும்" என்று குறிப்பிட்டார்.

"சுவாசிப்பதற்கான இடம், தெளிந்து தேர்தலுக்கான இடம்" என இராணுவ வீரர்களுக்கு உதவும் ஆன்மிக வழிகாட்டிகளின் பங்கை எடுத்துரைத்த கர்தினால், "மோதல்களுக்கு மத்தியிலும் மனத்தாழ்மை, சேவை மற்றும் மனித மாண்பிற்கு மரியாதை செலுத்தும் செயல்கள் வீரர்களுக்குத் தேவை" என்று எடுத்துக்காட்டினார்.

நீதி, உரையாடல் மற்றும் அறநெறிமுறைப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது என்பதை வலியுறுத்திய கர்தினால், சிலுவையை 'அனைத்துக் கிறிஸ்தவ அதிகாரங்களின் முன்மாதிரி' என்று அழைத்தார்.

இத்தாலியின் இராணுவக் கத்தோலிக்கத் திருஅவை நிர்வாகம், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆன்மிக ஆதரவை வழங்குவதற்காக 1926-இல் நிறுவப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2026, 13:32