தேடுதல்

வாஷிங்டன் டி.சி.யில் புத்த துறவிகளின் உரைகளுக்குச் செவிமடுக்கும் மக்கள் வாஷிங்டன் டி.சி.யில் புத்த துறவிகளின் உரைகளுக்குச் செவிமடுக்கும் மக்கள்   (ANSA)

பல்முனை உரையாடலுக்குத் திருப்பீடம் அழைப்பு!

பிப்ரவரி 11, புதன்கிழமையன்று வாஷிங்டன், டி.சி.யில் இடம்பெற்ற OAS எனப்படும் அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் எட்டாவது பொது அமர்வின்போது மனித மாண்பு, மதச் சுதந்திரம் மற்றும் வறுமை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேம்படுத்துவதில் திருப்பீடத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார் பேராயர் Serrano.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 11, புதன்கிழமையன்று வாஷிங்டன், டி.சி.யில் இடம்பெற்ற OAS எனப்படும் அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் எட்டாவது பொது அமர்வின் போது உரையாற்றிய அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Juan Antonio Cruz Serrano அவர்கள், பல்முனை உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் மக்களாட்சி, மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பலதரப்பு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார் பேராயர் Serrano.

உலகளாவிய ஒப்பந்தங்கள் அதிக சவால்களை எதிர்கொண்டாலும், அமெரிக்க மாநிலங்களின் அமைப்பு (OAS) போன்ற அனைத்துலக அமைப்புகளை வலுக்குறையச் செய்யாமல் ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உலக அமைதி நாளிற்கான அண்மைய செய்தியை குறிப்பிட்டுக் காட்டினார் பேராயர் Serrano.

மக்களாட்சி, மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நான்கு தூண்களில் கவனம் செலுத்தி, வலுவான நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் மக்களாட்சி விழுமியங்களின் கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார் பேராயர் Serrano.

மனித மாண்பு, மதச் சுதந்திரம் மற்றும் வறுமை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேம்படுத்துவதில் திருப்பீடத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார் பேராயர் Serrano.

"வட்டாரப் பகுதிகளில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஆதரவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மாநிலங்களின் அமைப்புடன் இணைந்து பணியாற்ற திருப்பீடம் தயாராக உள்ளது என்று பகிர்ந்து கொண்டார் பேராயர்.

1978-ஆம் ஆண்டு நிரந்தர பார்வையாளராக ஆனதிலிருந்து, அமெரிக்க நாடுகளிடையே உரையாடல் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளமாக அமெரிக்க மாநிலங்களின் அமைப்பை திருப்பீடம் கருதுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 பிப்ரவரி 2026, 11:47