மினசோட்டாவில் வன்முறைக்கு எதிராக வத்திக்கான் கண்டனம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மினசோட்டாவில் அமெரிக்க குடிவரவு நடைமுறைப்படுத்துதலுடன் தொடர்புடைய அண்மைய வன்முறையை கடுமையாகக் கண்டித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
“இரண்டு அமெரிக்கக் குடிமக்களின் மரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும், “அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அமைதியான, வன்முறையற்ற நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.
அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்புடன் தொடர்புடைய முன்மொழியப்பட்ட "அமைதி வாரியம்" பற்றிய கவலைகள் குறித்தும் பேசியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், "இவ்வாரியத்தில் வத்திக்கான் சேரலாமா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்றும் "அதன் சில பகுதிகள் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
டேனிஷ் அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் குறித்து எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்
மேலும் இத்தாலியில் உள்ள காசா சொல்லியேவோ தெல்லா சோஃபெரென்சா (துன்ப நிவாரணத்திற்கான) மருத்துவமனையில் நிதி மற்றும் தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்க்க வத்திக்கானின் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதிப்படுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்