தேடுதல்

புனிதக் கதவு மூடப்பட்டு முத்திரையிடப்படும் திருச்சடங்கு புனிதக் கதவு மூடப்பட்டு முத்திரையிடப்படும் திருச்சடங்கு  (@VATICAN MEDIA)

உரோமையில் 4 பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் மூடப்படும் நிகழ்வு!

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நான்கு முக்கியப் பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் இந்த வாரம் நடைபெறும் தனிப்பட்ட சடங்குகள் மூலம் முழுமையாக மூடி முத்திரையிடப்பட்டு வருகின்றன.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

உரோமையிலுள்ள நான்கு முக்கிய பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டு, முத்திரையிடப்படும் தனிப்பட்ட சடங்குகளுக்கான கால அட்டவணையை திருப்பீடச் செய்தித் தொடர்பகம்  வெளியிட்டுள்ளது.

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நான்கு முக்கியப் பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் இந்த வாரம் நடைபெறும் தனிப்பட்ட சடங்குகள் மூலம் முழுமையாக மூடி முத்திரையிடப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, ஜனவரி 13, செவ்வாயன்று, மாலை 7:00 மணிக்கு மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலின் புனிதக் கதவு அதிகாரப்பூர்வமாக மூடி முத்திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 14, புதன்கிழமையன்று புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் இந்தத் திருச்சடங்கு நடைபெற்றது. ஜனவரி 15, வியாழனன்று, புனித பவுல் பெருங்கோவிலின் புனிதக் கதவு மூடி முத்திரையிடப்பட்டது.

இந்தத் தொடர் சடங்குகளின் இறுதி நிகழ்வு ஜனவரி 16, வெள்ளியன்று, மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறவுள்ளது. வத்திக்கான் மரபுப்படி இந்தச் சடங்கின் போது ஒரு வெண்கலப் பெட்டி செங்கல் சுவருக்குள் வைத்து முத்திரையிடப்படும்.

அந்த வெண்கலப் பெட்டியில் புனிதக் கதவு மூடப்பட்டதற்கான அதிகாரப்பூர்வப் பதிவு, புனிதக் கதவின் சாவி, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய மூடுவிழாவிலிருந்து இன்றுவரை வெளியிடப்பட்ட பல்வேறு திருத்தந்தைசார் பதக்கங்கள் மற்றும் அந்தந்தப் பெருக்கோவிலின் சிறப்பைக் குறிக்கும் நினைவுப் பதக்கங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2026, 13:57