பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

போர்க்குற்றங்களைத் தடுக்க திருப்பீடம் அழைப்பு!

பேராயர் காச்சா தனது உரையில், மனித வாழ்க்கையின் மீதான மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், கூட்டு பதில்களின் பற்றாக்குறை குழந்தைகள், பெண்கள் மற்றும் இன மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து தீங்கு விளைவிப்பதாகவும் எச்சரித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போர்க்குற்றங்களை அங்கீகரிப்பதைத் தாண்டி, பயனுள்ள தடுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அனைத்துலகச் சமூகத்தை  திருப்பீடம் வலியுறுத்துவதாகக் கூறினார் பேராயர் கபிரியேலே காச்சா

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் மற்றும் தண்டிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டிற்கான தயாரிப்புக் குழுவில் உரையாற்றுகையில், இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா.விற்கானத் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா.

மனித வாழ்க்கையின் மீதான மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், கூட்டு பதில்களின் பற்றாக்குறை குழந்தைகள், பெண்கள் மற்றும் இன மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து தீங்கு விளைவிப்பதாகவும் எச்சரித்தார் பேராயர் காச்சா.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புகளுடன், அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில் ஆக்கபூர்வமான உரையாடலின் அவசியத்தை தனது உரையில் வலியுறுத்தினார் பேராயர் காச்சா.

நிறைவுத்தன்மை, உரிய நடைமுறை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மதித்து, நாடுகடந்த குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கு பன்னாட்டு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும்  எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.

எந்தவொரு பதிலின் மையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பயனுள்ள மற்றும் நீடித்த அனைத்துலகக் கட்டமைப்பிற்கு வழிவகுக்கும் உரையாடலை திருப்பீடம் எதிர்நோக்குவதாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2026, 12:46