செய்தியாளர்களிடம் பேசும் கர்தினால் பரோலின் (கோப்புப் படம்) செய்தியாளர்களிடம் பேசும் கர்தினால் பரோலின் (கோப்புப் படம்) 

அமெரிக்க-ஐரோப்பா பதட்டங்களுக்கு மத்தியில் அமைதியைக் காக்க அழைப்பு!

அமெரிக்க-ஐரோப்பா பதட்டங்களுக்கு மத்தியில் அமைதியைக் காக்க அழைப்பு விடுத்துள்ள கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காசா அமைதி முயற்சிகள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் பன்னாட்டுச் சூழலை மோசமாக்குகின்றன” என்று எச்சரித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சுதந்திர சிந்தனைக்கான ஆய்வகத்தின் 25-வது ஆண்டு விழாவின் போது, ​அந்தோணியானும் கலையரங்கத்தில் பேசியபோது இவ்வாறு எச்சரிக்கை விடுத்த கர்தினால் பரோலின் அவர்கள், "கடும் விவாதங்கள் இல்லாமல், பதட்டங்களைத் தூண்டாமல்" உரையாடலை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முன்மொழியப்பட்ட காசா அமைதி வாரியத்திற்குத் திருப்பீடம் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அது நிதி ரீதியாக பங்களிக்காது என்றும், இந்தத் திட்டத்தை இன்னும் கவனமாக மதிப்பாய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார் கர்தினால் பரோலின்.

“இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பது பரந்த மத்திய கிழக்கு அமைதிக்கு முக்கியமாகும்” என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், ஒரு சாத்தியமான இரு-அரசு தீர்வுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

பொறுப்பான ஊடகப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதுடன், அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரித்த அவர், வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற உலகளாவிய நெருக்கடிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது திருஅவைக் கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2026, 12:33