தேடுதல்

விசுவாசிகளுக்கு ஆசீர் வழங்கும் திருத்தந்தை விசுவாசிகளுக்கு ஆசீர் வழங்கும் திருத்தந்தை   (@Vatican Media)

30 இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் வத்திக்கானுக்கு வருகை!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த ஆண்டில், அவரது நிகழ்வுகளுக்கு அதிக அளவில் விசுவாசிகள் வருகைபுரிந்துள்ளதை இந்த எண்கள் எடுத்துக்காட்டுகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2025-ஆம் ஆண்டில், வத்திக்கானில் 31,70,000-க்கும் அதிகமான விசுவாசிகள் திருத்தந்தையின் கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு விழாக்களில் கலந்து கொண்டதாக, திருத்தந்தையின் இல்லத் தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 30, செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்தப் புள்ளிவிபரங்கள் குறித்த அறிக்கையில், மேற்கண்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை திருப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது, அதாவது,  2,62,820 பேர் பதிவு செய்யப்பட்டனர் என்றும், இதில் திருத்தந்தையின் பொது மற்றும் யூபிலி மறைக்கல்வி உரைக்  கூட்டத்தில் 60,500 பேரும், சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களில் 10,320 பேரும், திருப்பலிகளில் 62,000 பேரும், மூவேளை இறைவேண்டல் உரையில்  கலந்து கொண்ட 1,30,000 பேரும் அடங்குவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 8, வியாழக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏறக்குறைய 30,00, 000 விசுவாசிகள் வத்திக்கான் நிகழ்வுகளில் பங்கேற்றனர் என்றும், திருத்தந்தையின் 36 பொது மற்றும் சிறப்பு யூபிலி விழா மறைக்கல்வி உரைகளில்  10,69,000 பேர் கலந்து கொண்டதாகவும், சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களில் 1,48,300 பேர் கலந்து கொண்டதாகவும், வழிபாட்டுச் சடங்குகளில் 7,96,500 பேர் கலந்து கொண்டதாகவும், ஞாயிறு மூவேளை இறைவேண்டல் உரைகளில் 9,00,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அதன் புள்ளிவிபரங்கள்.

டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 2,50,000 பேர் திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை இறைவேண்டல் உரைகளில் பங்கேற்றனர் என்றும், அதேவேளையில், அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற வழிபாட்டு விழாக்களிலும் (ஏறக்குறைய 2,00,000 பேர்) மற்றும் பொது மற்றும் யூபிலி விழா மறைக்கல்வி உரைகளில் (ஏறத்தாழ 2,95,000பேர்) பங்கேற்ற திருப்பயணிகளின் வரவு உச்சம் தொட்டதாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த ஆண்டில், அவரது நிகழ்வுகளுக்கு அதிக அளவில் விசுவாசிகள் வருகைபுரிந்துள்ளதை  இந்த எண்கள் எடுத்துக்காட்டுகின்றன அதன் புள்ளிவிபரங்கள் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 டிசம்பர் 2025, 14:41