கடத்திச்சென்ற உக்ரைனியக் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
இரஷ்யாவிற்கு கடத்திச்செல்லப்பட்ட உக்ரைனியக் குழந்தைகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிப்படுத்த, ஐக்கிய நாடுகள் அவை தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் அவசரகால சிறப்பு அமர்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாகப் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும், மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது திருப்பீடம்.
மேலும் "வலுக்கட்டாயமாக கடத்திச்செல்லப்பட்ட அனைத்து உக்ரைனியக் குழந்தைகளையும் இரஷ்யா உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்களைக் கடத்திச்செல்வது, குடும்பங்களிலிருந்து பிரிப்பது அல்லது அவர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மாற்றுவது போன்ற செயல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது திருப்பீடம்.
ஐக்கிய நாடுகள் அவை ஒரு பிணைப்பில்லாத தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு 91 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 57 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும் இருந்தன
இத்தாலிய ஆயர்பேரவைத் தலைவரும், Bologna நகர் பேராயருமான கர்தினால் Zuppi அவர்கள் வழியாக திருப்பீடம் தனது தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்