தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் 100 கிறிஸ்து பிறப்புக் காட்சிகள்! புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் 100 கிறிஸ்து பிறப்புக் காட்சிகள்! 

புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் 100 கிறிஸ்து பிறப்புக் காட்சிகள்!

“யூபிலி ஆண்டில் கலாச்சாரத் தொடரின்” ஒரு பகுதியாக வத்திக்கானில் 100 கிறிஸ்து பிறப்புக் காட்சிகள் அடங்கிய எட்டாவது கண்காட்சி டிசம்பர் 8, திங்கள்கிழமையன்று, புனித பேதுரு சதுக்கத்தின் ஒரு பகுதில் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

டிசம்பர் 8, திங்கள்கிழமையன்று, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தின் இடது தூண் வரிசைக்கு அடியில் 100 கிறிஸ்து பிறப்புக் காட்சிகள் அடங்கிய கண்காட்சி எட்டாவது முறையாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

"யூபிலி என்பது கலாச்சாரம்" என்பதன் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த நிகழ்வை புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்கள் தொடங்கிவைப்பார் என்றும், அதைத் தொடர்ந்து மெக்சிகன் தூதரகம் ஏற்பாடு செய்யும் ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் குரோஷியா, ருமேனியா, பெரு, எரித்திரியா மற்றும் தைவான் உள்ளிட்ட 23 நாடுகளிலிருந்து 132 கிறிஸ்துப் பிறப்புக் காட்சிகள் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கிறிஸ்துப் பிறப்புக் காட்சிகளில் கலைஞர்கள் ஜப்பானிய காகிதம், பட்டு, தேங்காய் நார், கம்பளி மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உரோமை மாநகர பேருந்து ஒன்றின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துப் பிறப்புக் காட்சி, தோல் பதப்படுத்தும் டிரம் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்ட காட்சி, இயந்திரக் காட்சிகள் மற்றும் ஒரு பெரிய மெக்சிகன் காட்சி ஆகியவை தனித்துவமான படைப்புகளில் அடங்கும் என்றும் விவரிக்கப்படுள்ளது.

யூபிலி 2025-இன் அதிகாரப்பூர்வ தோழமை அமைப்பான அர்பன் விஷன் குழுமத்தின் ஆதரவுடன் பெரிய நுழைவாயில் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் உலகளாவிய பாரம்பரியங்களுக்கான ஒரு நினைவூட்டல் என்று அந்தக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

இந்தக் கண்காட்சி டிசம்பர் 8, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 டிசம்பர் 2025, 14:47