How Kids Roll திரைப்படத்தின் கதாநாயகர்கள் How Kids Roll திரைப்படத்தின் கதாநாயகர்கள் 

அமைதியின் ஆற்றல் நம்மில் மீண்டும் திரும்ப செபிக்க வேண்டும்

"ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கையின்படி, போரின் மாயச்சூழலை விட்டு விலகி, அமைதியின் ஆற்றல் திரும்புவதற்காக செபிக்க வேண்டும் - பவுலோ ரூபினி.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வாழ்க்கையின் மீதான அன்பினால். நாம் குழப்பமான மற்றும் மகிழ்ச்சியற்ற காலங்களில் வாழ்கிறோம் என்றும், நாம் இரக்கத்தை உணர இயலாததால் மகிழ்ச்சியற்றவர்களாக வாழ்கின்றோம் என்றும் கூறினார் முனைவர் பவுலோ ரூபினி.

செப்டம்பர் 25, வியாழன் வத்திக்கான் நூலகத் திரையரங்கில் திருப்பீட சமூகத்தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட காசாப்பகுதி சிறாரின் வாழ்க்கை நிலை பற்றிய ஆவணத் திரைப்படத்தின் இறுதியில் அத்திரைப்படம் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்தார் சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி.

நமது வாழ்க்கையில் குழந்தைகளின் தூய பார்வை கொண்டவர்களாக இருக்கும் நிலையை நாம் இழந்துவிட்டோம் என்று எடுத்துரைத்த ரூபினி அவர்கள், இந்த பார்வையை மீட்டெடுப்பதே நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் இருக்கும் நாம் இந்த நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் விதைகளை உள்ளத்தில் சுமந்தவர்களாக, "ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கையின்படி, போரின் மாயச்சூழலை விட்டு விலகி, அமைதியின் ஆற்றல் திரும்புவதற்காக செபிக்க வேண்டும் என்றும் கூறினார் ரூபினி.

Giuseppe Ungarett என்னும் கவிஞரின் வரிகளான, “எனது அமைதியில், அன்பால் நிறைந்த கடிதங்களை நான் எழுதினேன்; ஒருபோதும் வாழ்க்கையில் நான் இவ்வளவு இணைந்ததில்லை." என்பதை எடுத்துரைத்த ரூபினி அவர்கள், வாழ்க்கையின் மீதான அன்புடன் மீண்டும் வாழத் தொடங்குவோம், இங்கிருந்து நாம் மீண்டும் நமது வாழ்வைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 செப்டம்பர் 2025, 15:42