நல்ல சமாரியராகிய இயேசு  நல்ல சமாரியராகிய இயேசு  

34ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான கருப்பொருள்

துன்பங்களாகிய வறுமை, இயலாமை மற்றும் தனிமை காரணமாக பலவீனமான சூழலில் நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தாங்கிக்கொள்கிறோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

“நல்ல சமாரியரின் இரக்கம் கொண்டவர்களாக - அயலாரின் துயரைத் தாங்குவதன் வழியாக அன்பு செலுத்துதல்” என்ற கருப்பொருளானது திருத்தந்தை அவர்களால் 2026-ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட இருக்கும் 34-ஆவது உலக நோயாளர் தினத்திற்கான கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறை.

செப்டம்பர் 26, வெள்ளியன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறையானது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் நாள் சிறப்பிக்கப்பட இருக்கும் 34-ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான கருப்பொருளினை வெளியிட்டுள்ளது.

கள்வர்களின் கைகளில் விழுந்த துன்பப்படும் மனிதனைப் பராமரிப்பதன் வழியாக அன்பு காட்டும் நல்ல சமாரியனின் நற்செய்தி உவமையை அடிப்படையாகக் கொண்ட கருப்பொருளானது, அண்டை வீட்டாரின் மீதான அன்பின் அடிப்படையை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அன்புக்கு நெருக்கமான உறுதியான அடையாளச்செயல்கள் தேவை, இதன் வழியாக நாம் மற்றவர்களின் துன்பங்களாகிய வறுமை, இயலாமை மற்றும் தனிமை காரணமாக பலவீனமான சூழலில் நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தாங்கிக்கொள்கிறோம். நல்ல சமாரியரான இயேசு கிறிஸ்து, காயமடைந்த மனிதகுலத்தை நெருங்கி, திருஅவையின் சடங்குகள் வழியாக ஆறுதல் எண்ணெயையும் நம்பிக்கையின் திராட்சை இரசத்தையும் நம்மீது ஊற்றுகிறார், இதன் வழியாக நோயால் பலவீனமான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு உதவி மற்றும் நெருக்கத்தின் செயல்களையும் சைகைகளையும் தூண்டுகிறார் என்றும் இக்கருப்பொருளானது எடுத்துரைக்கின்றது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 செப்டம்பர் 2025, 15:38