யூபிலி நிகழ்வில் இளையோரிடம் அமைதிக்கு அழைப்பு!
ஜெர்சிலின் டிக் ரோஸ் - வத்திக்கான்
போர் நம்மை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன் நாம் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இளையோருக்கான யூபிலி நிகழ்வொன்றில் அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் Zuppi.
ஜூலை 31, இவ்வியாழனன்று, நீயே பேதுரு என்னும் கருப்பொருளில் அமைதி மற்றும் விசுவாசத்தை மைப்படுத்தி புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற 40,000 இத்தாலிய இளையோரிடம் இவ்வாறு கூறினார் கர்தினால் கர்தினால் Zuppi.
வன்முறை, ஆயுத வர்த்தகம் மற்றும் அணு ஆயுதங்கள் மீதான அலட்சியப் போக்கையும் கண்டித்த கர்தினால் ஸுப்பி அவர்கள், காயமடைந்த இந்த உலகை குணப்படுத்த இதயங்களை ஆயுதமற்றவைகளாக மாற்றவும் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, எருசலேமிலிருந்து காணொளியில் உரையாற்றிய எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா. அவர்கள், துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும், காசாவில் போரினால் நிலவும் வறுமையையும் எடுத்துரைத்தார்.
மேலும், புனித பூமி மற்றும் உலகம் முழுவதிலும், துன்பங்கள் மத்தியில் நம்பிக்கையின் ஒளியைப் பரப்புகிறவர்களைப் பாராட்டிய கர்தினால் பிட்சபாலா அவர்கள், உரையாடல் மற்றும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கையும் எடுத்துக்காட்டினார்.
இசை, இறைவார்த்தைப் பகிர்வு, மற்றும் விசுவாச சாட்சியங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதி, இரக்கம் மற்றும் ஒன்றிப்பை வலியுறுத்துவதாகவும் அமைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்