கர்தினால் André Vingt-Trois இறைபதம் சேர்ந்தார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பிரான்சின், பாரீஸ் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயரான கர்தினால் André Vingt-Trois அவர்கள் ஜூலை 18 வெள்ளிக்கிழமை தனது 82-ஆவது வயதில் காலமானார்.
2007 -ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவராகவும், 2005-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பன்னிரண்டு ஆண்டுகள் தலைநகரின் மேய்ப்பாளராகவும் இருந்த கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கான நினைவுத் திருப்பலியானது பாரீசில் உள்ள நோத்ரே டேம் அன்னை மரியா திருத்தலத்தில் ஜூலை 18 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பிக்கப்பட்டது.
1942 - ஆம் ஆண்டு நவம்பர் 7, அன்று பாரிஸில் பிறந்து, 1969 - ஆம் ஆண்டில் குருவாக அருள்பொழிவு பெற்ற கர்தினால் அவர்கள், 1988 - ஆம் ஆண்டு தனது மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பொறுப்பேற்றார். 1999 - ஆம் ஆண்டு வரை, கர்தினால் பேராயராக இருந்த ஜீன்-மேரி லஸ்டிகர் அவர்களின் வலது கரம் போன்று செயல்பட்டு வந்த கர்தினால் த்ரோயிஸ் அவர்கள், குறிப்பாக பேராயரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது மறைமாவட்டத்தினை நல்ல முறையில் நிர்வகித்தார்.
1999- ஆம் ஆண்டு விங்ட்-ட்ரோயிஸ் டூர்ஸின் பேராயராகவும், 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் பாரீசின் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்.
2007 முதல் 2013 வரை பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவராகவும், 2005-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பன்னிரண்டு ஆண்டுகள் தலைநகரின் மேய்ப்பாளராகவும் இருந்த கர்தினால் André Vingt-Trois அவர்கள் தனது 75-ஆவது வயதில் பேராயர் பதவியில் இருந்து பணிஓய்வு பெற்றார்.
2007- ஆம் ஆண்டு நவம்பர் 24, அன்று பிரான்சின் புனித லூயிஸ் மறைமாவட்டத்தின் கர்தினால் அருள்பணியாளர் என்ற பட்டத்துடன் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உருவாக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட திருத்தூதர் பவுலின் ஆண்டின் போது லெபனானுக்கான தனது சிறப்புத் தூதராக திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் இவரை நியமித்தார்.
மார்ச் 2017 முதல், குய்லைன்-பாரே (Guillain-Barré) என்னும் முடக்குவாத நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட பிறகு உடல் பலவீனமடைந்த கர்தினால் த்ரோயிஸ் அவர்கள், ஜூலை 18 இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்