தேடுதல்

இணைய வழியில் மறைப்பணியாற்றுவோருக்கான யூபிலி தொடக்க விழாவில் உரையாற்றும் திருப்பீடச் செயலர், கர்தினல் பியத்ரோ பரோலின் இணைய வழியில் மறைப்பணியாற்றுவோருக்கான யூபிலி தொடக்க விழாவில் உரையாற்றும் திருப்பீடச் செயலர், கர்தினல் பியத்ரோ பரோலின்  

கடவுளால் இணைக்கப்படும் திருஅவையின் வலையமைப்பு

கர்தினால் பியத்ரோ பரோலின் : விசுவாசத்திலும் அன்பிலும் இணையத்தில் பகிரப்படும் ஒரு சிறிய பதிவு கூட இறையருளின் தீப்பொறியாக மாறும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஜூலை 28, 29  ஆகிய இரண்டு நாட்களும் திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப்பணித் துறையும், சமூகத் தொடர்புத் துறையும் இணைந்து இளையோருக்கான யூபிலியின் ஒரு பகுதியாக, இணைய வழியில் மறைப்பணியாற்றும் அனைவரையும் இன்றாக இணைத்து செபிக்கவும், இந்த யூபிலியைக் கொண்டாடவும் அழைத்துள்ளது.

உரோமையில் உள்ள கொன்சிலியாசியோனே கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கவிழாவில் உரையாற்றிய திருப்பீடச் சமூகத் தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி  அவர்கள், இணைய வழியில் மறைப்பணியாற்றும்  அனைவரையும் நேரில் சந்திப்பது ஓர் அழகிய தருணம் என்றும், இணைய தளங்கள் நம்மை ஒன்றிணைக்கும் அதே வேளை, உண்மையில் நம்மை பிணைப்பது வலையமைப்பு  அல்ல, மாறாக இறைவனே நம்மை ஒன்றிணைக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

இணையம் செயல்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே திருஅவை   ஒரு "வலையமைப்பாக" இருந்து வருகிறது என்பதையும், இந்த வலையமைப்பு தற்போதுள்ள  வலையமைப்பின் குறியீடுகளால் ஆனதல்ல, மாறாக திரு அவையின் வலையமைப்பு பலவீன மனிதர்களால் ஆனது மற்றும் பன்முகத்தன்மையுடையது என்றும் உரைத்தார்.

இணைய வழியில் மறைப்பணியாற்றும் போது சுய விளம்பரம் தவிர்த்து, பணிவுடன் மறைபணியில் ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் முனைவர் ருஃபினி.

மேலும், இணைய வழியில் மறைப்பணியாற்றும் அனைவரும்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், இக்காலத்தில் மறைப்பணியை ஆற்றும் இயேசுவின் சீடராக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார் முனைவர் பவுலோ ருஃபினி.

இதே கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், தவறான தகவல், வேறுபாடு, தனிமை போன்றவை  இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், இணையவழியில் மறைப்பணியாற்றும் ஒவ்வொருவரும் இதிலிருந்து வேறுபட்டு கிறிஸ்துவின் ஒளியாகச் செயல்படவேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

விசுவாசத்திலும் அன்பிலும் இணையத்தில்  பகிரப்படும் ஒரு சிறிய பதிவு கூட இறையருளின்  தீப்பொறியாக மாறும் என்றும், மக்களிடயே இணைய வழியில் தாக்கத்தை ஏற்படுத்துவோர் இறைவார்த்தையிலும், இறைவேண்டலிலும், அருளடையாளங்களிலும் வேரூன்றி, ஆற்றலைப் பெறவும் ஊக்குவித்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூலை 2025, 15:40