கொலம்பியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை இரங்கல்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கொலம்பியாவில் ஆகஸ்ட் 10ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கொலம்பிய ஆயர்கள் பேரவையின் தலைவரான கார்த்தஜீனா பேராயர் பிரான்சிஸ்கோ ஜாவியர் மூனேரா கொரேயா அவர்களுக்கு திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை தெரிவித்துள்ள திருத்தந்தை, உயிரிழந்தவர்கள் நிலையான இளைப்பாறுதலைப் பெறவும், பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டு வரவும்” இறைவேண்டல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப் பணிகளிலும் நிவாரண உதவிகளிலும் தாராள அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, மேலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது ஆன்மீக நெருக்கத்தையும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதுடன், சில தேவாலயங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக, கொலம்பிய மக்களுக்கு ஆன்மீக வலிமையையும் கிறிஸ்தவ நம்பிக்கையையும் இறைவன் வழங்க வேண்டும் என்று இறைவேண்டல் செய்த திருத்தந்தை, தனது திருத்தூது ஆசீரை வழங்கி செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
