வரலாற்று அறிவியலுக்கான திருத்தந்தையின் குழுவில் புதிய உறுப்பினர்களை நியமித்தார் திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வரலாற்று அறிவியலுக்கான திருத்தந்தையின் குழுவின் புதிய உறுப்பினர்களாக பேராசிரியர்கள் உம்பெர்டோ லோங்கோ, பிரான்செஸ்கோ செசாரியோ மற்றும் அன்னா பரான்ஸ்கா ஆகிய மூவரையும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்
70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம்
வரலாற்று அறிவியலுக்கான திருத்தந்தையின் குழு, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களால் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கு முன்னோடியாக, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்கள் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் வெளியிட்ட Saepenumero considerantes என்ற திருத்தூது மடல் வழியாக நிறுவிய வரலாற்று ஆய்வுகளுக்கான கர்தினால் குழுவின் மரபை இக்குழு தொடர்கிறது.
திருஅவையின் ஆவணக் காப்பக மரபு, குறிப்பாக வத்திக்கான் ஆவணக் காப்பகங்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது இக்குழுவின் பணியின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. திருத்தந்தையரின் பாதுகாப்பில் உள்ள ஆவணத் தொகுப்புகளை ஆய்வாளர்கள் அதிக அளவில் சிறந்த முறையில் அணுகுவதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் திருத்தந்தையர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் தலைவராக இயேசு சபையைச் சேர்ந்த அருள்தந்தை மாரெக் இங்லோட் பணியாற்றி வருகிறார்; பியரான்டோனியோ பியாத்தி செயலராகப் பணியாற்றுகிறார் என்பது குறிபிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
