கர்தினால் ஜூலியோ டுவார்டே லங்கா கர்தினால் ஜூலியோ டுவார்டே லங்கா 

அமைதியின் நற்செய்தியை அறிவித்த கர்தினால் லங்கா மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்!

மொசாம்பிக்கின் சாய்-சாய் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயரும், கர்தினாலுமான ஜூலியோ டுவார்டே லங்கா அவர்கள் 98 வயதில் காலமானதையடுத்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மொசாம்பிக் நாட்டின் சாய்-சாய் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயரும், கர்தினாலுமான ஜூலியோ டுவார்டே லங்கா அவர்கள் ஆகஸ்ட் 3ஆம் நாள், 98 வயதில் காலமானதையடுத்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மொசாம்பிக்கின் சாய்-சாய் மறைமாவட்டத்தின் திருத்தந்தை  நிர்வாகி பேராயர் பிரான்சிஸ்கோ சிமோயோ அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், மொசாம்பிக் ஆயர்கள், மறைந்த கர்தினாலின் குடும்பத்தினர், அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மறைமாவட்ட மக்கள் மற்றும் துயருறும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் தனது ஆன்மிக நெருக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், கர்தினால் லங்கா அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள பணியாளராக, எளிமை, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியுடன் தமக்கு ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை வழிநடத்தினார் என்றும், சிரமங்களால் மனம் தளராமல், அவற்றை நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்புகளாகவே அவர் கருதினார் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மொசாம்பிக் மக்களிடையே அமைதி, ஒப்புரவு மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் நோக்கில் அமைதியின் நற்செய்தியை அறிவிப்பதில் கர்தினால் லங்கா அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை திருத்தந்தை அவர்கள் தமது இரங்கல் செய்தியில் நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஆகஸ்ட் 2026, 13:41