வத்திக்கானில் ஞாயிற்றுக்கிழமை மூவேளை இறைவேண்டலின்போது திருத்தந்தை அவர்கள் வத்திக்கானில் ஞாயிற்றுக்கிழமை மூவேளை இறைவேண்டலின்போது திருத்தந்தை அவர்கள்  (@Vatican Media)

சியூட்டாவில் இடம்பெயர்வு நெருக்கடி: அமைதி நிலவ திருத்தந்தை இறைவேண்டல்

ஸ்பெயினின் சியூட்டா பகுதியில் நிலவும் இடம்பெயர்வு நெருக்கடி குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை , அங்கு அமைதி, நிலைத்தன்மை, நீதி நிலவ இறைவேண்டல் செய்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சியூட்டாவில் நிலவி வரும் மோசமான இடம்பெயர்வு நெருக்கடி குறித்து  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, அங்கு அமைதி, நிலைத்தன்மை மற்றும் நீதியை ஏற்படுத்தும் தீர்வுகள் விரைவில் கிடைக்க இறைவேண்டல் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 02 , ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, உலகெங்கும் நடைபெற்று வரும் போர்கள் நிறைவுக்கு வரவும், மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியில் தீர்வு காணப்படவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வட ஆப்பிரிக்காவில் மொரோக்கோவை ஒட்டியுள்ள சியூட்டா பகுதிக்குள் அண்மையில் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றதால் கடுமையான இடம்பெயர்வு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வரவேற்பு மையங்கள் நிரம்பி வழிவதுடன், கடல் வழியாக ஆபத்தான முறையில் எல்லையைக் கடக்க முயன்றவர்களில் குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, அசிசியின் மன்னிப்புப் பேறு குறித்து நினைவூட்டிய திருத்தந்தை, நல்லிணக்க மற்றும் நற்கருணை அருளடையாளங்களைப் பெற்று, பங்குக் கோவில் அல்லது பிரான்சிஸ்கன் ஆலயத்திற்குச் சென்று பெறப்படும் இந்த முழுமைப் பாவமன்னிப்புப் பேற்றை விசுவாசிகள் நன்றியுடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஆகஸ்ட் 2026, 13:42