தேடுதல்

இந்தோனேசியாவில் இடிந்து விழுந்த பள்ளிவாசல் அருகே மீட்புப் பணியில் மீட்புப் பணியாளர். இந்தோனேசியாவில் இடிந்து விழுந்த பள்ளிவாசல் அருகே மீட்புப் பணியில் மீட்புப் பணியாளர்.  (mosque Indonesia )

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்கு திருத்தந்தை ஆதரவு!

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியில் ஆகஸ்ட் 15 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ தமது ஆன்மீக நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று, இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தமது ஆன்மீக நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

எந்தே பேராயர் மேதகு பவுலுஸ் புடி கிளெடன், SVD, அவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்ட தந்திச் செய்தியில், இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் திருஅவை மற்றும் அரசு அதிகாரிகளை திருத்தந்தை ஊக்குவித்துள்ளதுடன் மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அவசரகாலப் பணியாளர்களுக்காகவும் இறைவேண்டல் செய்துள்ளார்.

உயிரிழந்தவர்களை இறைவனின் அன்புமிகு இரக்கத்திற்கு ஒப்படைத்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலையும் வலிமையையும் அளிக்குமாறு இறைவேண்டல் செய்துள்ளார்.

7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்; 135 பேர் காயமடைந்துள்ளதுடன், ஏறத்தாழ 13,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன; மேலும் 450 வீடுகள் சேதமடைந்துள்ளன. பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட குறைந்தது 167 பொதுக் கட்டடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஆகஸ்ட் 2026, 13:57