காஸ்தல் கந்தோல்ஃபோவில் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் திருத்தந்தை !
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், காஸ்தல் கந்தோல்ஃபோ நகருக்குத் திரும்பிச் சென்று, அங்குள்ள புனித தோமையார் வில்லனோவா பங்கில், தூய கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிறைவேற்றி, கடந்த ஆண்டைப் போலவே அங்கு மூவேளை செபத்தை வழிநடத்த உள்ளார்.
திருத்தந்தை அவர்கள் ஆகஸ்ட் 12ஆம் நாள் மாலை காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள திருத்தந்தையர் கோடை இல்லத்திற்குத் திரும்பி, ஆகஸ்ட் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார்.
ஆகஸ்ட் 15ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தூய கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு, காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள புனித தோமையார் வில்லனோவா திருத்தந்தையர் பங்கில் திருப்பலி நிறைவேற்றுவார். கடந்த ஆண்டைப் போலவே, திருப்பலி நிறைவடைந்த பின்னர் அங்கேயே மூவேளை செபத்தை வழிநடத்துவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
