தேடுதல்

‘அமைதியின் புகழ்ப்பாடல்’ நிகழ்ச்சியில் ஆண்ட்ரேயா பொசெல்லி  மற்றும் ABF Voices இசைக்குழு. ‘அமைதியின் புகழ்ப்பாடல்’ நிகழ்ச்சியில் ஆண்ட்ரேயா பொசெல்லி மற்றும் ABF Voices இசைக்குழு.  (©Canticle of Peace)

புனித பிரான்சிஸின் 800ஆம் ஆண்டு நினைவையொட்டி ‘அமைதியின் புகழ்ப்பாடல்’ செப நிகழ்வு

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் காஸ்தல் கந்தோல்போவில் நடைபெற்ற “அமைதியின் புகழ்ப்பாடல்” செப நிகழ்வு, புனித பிரான்சிஸ் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவையொட்டி இன்று இரவு வத்திக்கான் செய்தி இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் காஸ்தல் கந்தோல்போவில் உள்ள போர்கோ லவுதாத்தோ சீ (Borgo Laudato Si’) மையத்தில் இடம் பெற்ற “அமைதியின் புகழ்ப்பாடல்” (Canticle of Peace) என்ற செப நிகழ்வு, இன்று (ஜூலை 29) இரவு 9.00 மணிக்கு வத்திக்கான் செய்தி இணையதளத்திலும் அதன் யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

லவுதாத்தோ சீ உயர்கல்வி மையம் (Laudato Si’ Center for Advanced Training) மற்றும் ஆண்ட்ரேயா பொசெல்லி அறக்கட்டளை (Andrea Bocelli Foundation) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, அசிசியின் புனித பிரான்சிஸ் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

இந்த செப நிகழ்வில், புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஆண்ட்ரேயா பொசெல்லி அவர்களின் குரலுடன், ABF Voices குழுவைச் சேர்ந்த 164 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இசை நிகழ்த்துகின்றனர். இவர்கள் இஸ்ரேல், மேற்குக் கரை, உகாண்டா, ஹைட்டி மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். போர், வறுமை மற்றும் துன்பம் போன்ற அனுபவங்களைச் சந்தித்திருந்தாலும், இசை என்பது உரையாடல், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் உலகளாவிய மொழி என்பதை தங்களின் பாடல்களின் வழியாக இவர்கள் சாட்சியமாக வெளிப்படுத்துகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூலை 2026, 13:20