தேடுதல்

அமைதிக்கும் ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும் உரையாடல்

காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களை சந்தித்த திருத்தந்தை, அமெரிக்கா – ஈரான் இடையிலான அண்மைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்று, போரை விட உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை வழியே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை வரவேற்ற திருத்தந்தை, போரை விட உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை வழியே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிறந்தது என்றும், இந்த ஒப்பந்தம் உண்மையான அமைதிக்கான வழியைத் திறந்து, அணு ஆயுதங்களை அகற்றி, அனைத்து மக்களின் நலனையும் முன்னிறுத்தும் தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திருத்தந்தையரின் கோடை விடுமுறை  இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, அமெரிக்கா – ஈரான் இடையிலான அண்மைய புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்பெயின் பயணம், குடியேற்றம் மற்றும் திருஅவை தொடர்பான விடயங்கள் குறித்தும்  கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தனது ஸ்பெயின் பயணம் குறித்து பேசிய திருத்தந்தை, மக்கள் மற்றும் திருஅவை உறுப்பினர்களின் உற்சாகமான வரவேற்பை பாராட்டியதுடன், அரசியல் சூழலில் உரையாடல், ஒருவரை ஒருவர் கேட்பது மற்றும் பொதுநலனுக்காக இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

குடியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த திருத்தந்தை, வன்முறை, போர் மற்றும் மோதல்கள் காரணமாக நாடுகளை விட்டு வெளியேறும் மக்களை மரியாதையுடன் அணுக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, திருஅவையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் வேதனைக்குரியவை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஒற்றுமை மற்றும் திருஅவை உறவை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தனது செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 07:59