தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  (@Vatican Media)

ஈரான் – அமெரிக்கா இடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கு திருத்தந்தை லியோ அழைப்பு!

ஈரானும் அமெரிக்காவும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான் 

ஈரானும் அமெரிக்காவும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஜூன் 17 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை,“ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றும், இது பொறுமையான உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையின் ஊக்கமளிக்கும் பலனாகும்” என்றும் கூறினார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்க உதவிய மூன்றாம் தரப்பு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், உக்ரைனில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, போரினால் அப்பாவி மக்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டதுடன்  உக்ரைனில் போர் முடிவுக்கு வர வேண்டுமென்றும், , நீடித்த மற்றும் நீதியான அமைதிக்காக  இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 07:55