பொது மறைக்கல்வி உரையின்போது பொது மறைக்கல்வி உரையின்போது  (@Vatican Media)

நற்கருணை பவனிகள் நம்பிக்கையின் வெளிப்பாடு!

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை முன்னிட்டு வீதிகளில் நடைபெறும் நற்கருணை பவனிகள் மக்களின் நம்பிக்கை சான்றாகும். நமக்காகப் பிட்கப்பட்ட அப்பமாகிய இயேசுவை உற்றுநோக்கும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு, இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

பல நாடுகளில் மற்றும் வீதிகளில் நடைபெறும் நற்கருணை பவனிகள் மக்களின் நம்பிக்கை வெளிப்பாடாகும் என்றும், நம்பிக்கைக்குச் சான்றாக விளங்கும் இந்த  நற்கருணை பவனிகளைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்குமாறு நம்பிக்கையாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கேட்டுக் கொண்டார்.

ஜூன் 03, புதன்கிழமையன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, திருஅவை கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுவதை எடுத்துக்காட்டியாதுடன், நற்கருணையில் நாம், நமக்காகப் பிட்கப்பட்டு அளிக்கப்பட்ட அப்பமாகிய இயேசுவை உற்றுநோக்குகிறோம் என்றும், இந்த நற்கருணை பவனியில் நம்பிக்கையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவர்களை ஊக்குவித்தார்.

மேலும் அங்கு கூடியிருந்த நம்பிக்கையாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருத்தந்தை, மத்திய கிழக்கில் பணியாற்றி வரும் அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளுக்குத் தனது தனிப்பட்ட நெருக்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

இறுதியாக, அங்கு வந்திருந்த பல்வேறு துறவற சபையினரை வாழ்த்தி, "கடவுளையும் அமைதியையும் தேடி ஏங்குபவர்களுக்கு நீங்கள் நம்பிக்கையின் அடையாளமாக மாற வேண்டும்" என்று அவர்களைக் கேட்டுக்கொண்டு தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூன் 2026, 09:22