அன்னையர் மற்றும் காப்டிக் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்து!
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
அன்னையர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அன்னையர் களுக்காகத் சிறப்பு இறைவேண்டல் செய்த திருத்தந்தை, இயேசுவின் தாயான அன்னை கன்னிமரியாவின் பரிந்துரையில் அவர்களை ஒப்படைத்து அனைத்துத் அன்னையர்களுக்கும் தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்தார்.
மே 03, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியின் இறுதியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
வறுமை மற்றும் சவாலான சூழல்களில் வாழும் அன்னையர்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்திய திருத்தந்தை, ஒவ்வொரு ஆண்டும் மே 10-ஆம் தேதி கொண்டாடப்படும் "காப்டிக்-கத்தோலிக்க நட்பு தினத்தை" (Day of Coptic-Catholic Friendship) முன்னிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவரான திருத்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் (Pope Tawadros II) அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருத்தந்தை, கத்தோலிக்கர்களுக்கும் காப்டிக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் இந்த நட்பு, கிறிஸ்துவுக்குள் ஆழமான ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கானரி தீவு (Canary Islands) மக்களின் வரவேற்புப் பண்பிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, அவர்களுக்குத் ஹான்டியஸ் (Hondius) சுற்றுலா கப்பலில் ஹான்டாவைரஸ் (hantavirus) பாதிப்புடன் இருந்த பயணிகளுக்கு உதவியதற்காக அந்தத் தீவு மக்களை அவர் பாராட்டினார்.
ஜூன் 6 முதல் 12 வரை ஸ்பெயினுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் போது, கானரி தீவுகளுக்குச் சென்று அங்குள்ள புலம்பெயர்ந்தோரையும் அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் சந்திக்கத் தான் ஆவலுடன் இருப்பதாகத் திருத்தந்தை தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
