திருத்தந்தையுடன் ஐசுலாந்து அதிபர் ஹல்லா தோமஸ்டோட்டிர் திருத்தந்தையுடன் ஐசுலாந்து அதிபர் ஹல்லா தோமஸ்டோட்டிர் 

திருத்தந்தையுடன் ஐசுலாந்து அதிபர் சந்திப்பு

ஐசுலாந்து சமூகத்தின் பொதுநலனுக்காகவும், குறிப்பாக இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும் அங்குள்ள உள்ளூர் திருஅவை ஆற்றி வரும் ஆக்கபூர்வமான பணிகளைத் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 04, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஐசுலாந்து அதிபர் ஹல்லா தோமஸ்டோட்டிர் (Halla Tómasdóttir) அவர்களைத் தனிப்பட்ட  முறையில் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஐசுலாந்து அதிபர் , திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்துப் பேசினார் என்றும், இச்சந்திப்பின்போது  பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உடனிருந்தார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடலின் போது, இருதரப்புக்கும் இடையிலான சுமூகமான உறவுகள் குறித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தித் தொடர்பகம், குறிப்பாக, சமூகத்தின் பொது நலனுக்காகவும், குறிப்பாக இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும் உள்ளூர் திருஅவை ஆற்றி வரும் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் இச்சந்திப்பில் வலியுறுத்திக் கூறப்பட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சந்திப்பில் மாநில மற்றும் அனைத்துலகப் பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, உலகில் நிலவும் மோதல் சூழல்கள், பேச்சுவார்த்தையின் அவசியம் மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2026, 12:44