தேடுதல்

ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருடன் திருத்தந்தை ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருடன் திருத்தந்தை  (ANSA)

அமெரிக்க, போலந்து தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு!

2025-ஆம் ஆண்டு, ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருடன் திருத்தந்தை அவர்கள் நடத்திய இருதரப்புச் சந்திப்பில், முக்கிய உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 07, வியாழனன்று, முற்பகல் 11:30 மணிக்கு, அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அவர்களைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்திக்க உள்ளார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பணி ஏற்பு  திருப்பலியின்போது, மார்கோ ரூபியோ அவர்களும், அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸும் அவர்களும் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 2025-ஆம் ஆண்டு, ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருடன் திருத்தந்தை அவர்கள் நடத்திய இருதரப்புச் சந்திப்பில், முக்கிய உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மே 07, வியாழனன்று, அமெரிக்கத் தூதுக்குழுவுடனான சந்திப்பு நடைபெறும் அதே வேளையில், திருத்தந்தை அவர்கள் போலந்து நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) அவர்களையும் சந்திப்பார் என்றும், இச்சந்திப்பு காலை 9:00 மணிக்கு நடைபெறும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2026, 12:52