சுவிட்சர்லாந்து அரசுத் தலைவருடன் திருத்தந்தை சுவிட்சர்லாந்து அரசுத் தலைவருடன் திருத்தந்தை   (ANSA)

சுவிட்சர்லாந்து அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் , சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் கை பார்மெலின் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

மே 06, புதனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் , சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர்  கை பார்மெலின் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கை பார்மெலின் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இருவரையும் சந்தித்து உரையாடினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது என்றும், குறிப்பாக, திருத்தந்தையின் சுவிஸ் காவலர்களின் (Pontifical Swiss Guard) நம்பிக்கையான மற்றும் தொழில்முறை சேவைக்குச் சிறப்பான பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், அனைத்துலக மற்றும் மாநில அளவில் இருதரப்புக்கும் பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் தற்போது இடம் பெற்று வரும் போர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அமைதியை மேம்படுத்துவதற்காகப் பன்னாட்டு அளவில் இணைந்து செயல்படுவதற்கான விருப்பமும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மே 2026, 12:24