திருத்தந்தையுடன் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோ சந்திப்பு!
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
மே 07, வியாழனன்று, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தையுடனான இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளும் திருப்பீடத்திற்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பித்துக் கொண்டன.
மேலும் இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், மாநில மற்றும் அனைத்துலகச் சூழல்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள், அரசியல் பதற்றங்கள் நிலவும் பகுதிகள் மற்றும் மனிதாபிமானச் சிக்கல்கள் நிறைந்த இடங்கள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தினர். அத்துடன், சளைக்காமல் அமைதிக்காக உழைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதித்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
