தேடுதல்

திருத்தந்தையுடன் டொனால்ட் டஸ்க் திருத்தந்தையுடன் டொனால்ட் டஸ்க்   (ANSA)

திருத்தந்தையுடன் போலந்து அரசு தலைவர் சந்திப்பு !

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் போலந்து அரசு தலைவர் டொனால்ட் டஸ்க் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 07, வியாழனன்று,  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் போலந்து அரசு தலைவர் டொனால்ட் டஸ்க் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பிற்கு பிறகு டொனால்ட் டஸ்க் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

வெளியுறவுச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உரையாடல்கள், திருஅவைக்கும் போலந்து நாட்டிற்கும் இடையிலான நல்லுறவை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த உரையாடலில் போலந்து நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சூழல் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும், அந்நாட்டின் உள்ளூர் திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள், குறிப்பாக கல்வித் துறை மற்றும் நெறிமுறை சார்ந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துலக நாடுகளின் தற்போதைய சூழல் குறித்தும் குறிப்பாக உக்ரைன் மோதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் போலந்தின் பங்கு குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2026, 14:09