திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

கத்தோலிக்க திருஅவையில் புதிய ஆயர் மற்றும் தூதரக நியமனங்கள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மறைமாவட்டங்களில் நிர்வாக மாற்றங்களையும் புதிய நியமனங்களையும் மேற்கொண்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இதுவரை பனாமா நாட்டிற்கான திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்த ஃபோரண்டோனியானாவின் (Forontoniana) பட்டம்சார் பேராயர், பேரருள்திரு டகோபெர்டோ காம்போஸ் சாலாஸ் அவர்களை, எக்குவடோர் நாட்டிற்கான புதிய திருப்பீடத் தூதராகத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

கனடாவின் டிம்மின்ஸ் (Timmins) மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு செர்ஜ் போய்ட்ராஸ் அவர்கள் சமர்ப்பித்த பணித்துறப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அதனைத் தொடர்ந்து, சால்ட்-செயின்ட்-மேரி (Sault-Sainte-Marie) மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றி வரும் பேரருள்திரு ரோச் மார்ட்டின் அவர்களை டிம்மின்ஸ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் திருத்தந்தை நியமித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருள்திரு ராய் எட்வர்ட் காம்ப்பெல் அவர்கள் சமர்ப்பித்த பணித்துறப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை , அதனைத் தொடர்ந்து, புனித நற்கருணை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்பணி கேரி R. ஸ்டட்னீவ்ஸ்கி அவர்கள், ஜேம்ஸ்டவுன் மறைமாவட்டத்தின் பட்டய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்மீகப் பணியாளர் அருள்பணி ராபர்ட் P. பாக்ஸி அவர்கள், கடாக்வாஸ் மறைமாவட்டத்தின் பட்டம்சார் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வீலிங்-சார்லஸ்டன் மறைமாவட்ட ஆயர் பொறுப்பிலிருந்து பேரருள்திரு மார்க் E. பிரென்னன் அவர்கள் சமர்ப்பித்த பணித்துறப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் வீலிங்-சார்லஸ்டன் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, தற்போது ஏட்டோவின் பட்டம்சார் ஆயராகவும் வாஷிங்டன் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வரும் மேதகு ஆயர் எவெலியோ மென்ஜிவர்-அயாலா அவர்களை  நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அமெரிக்காவின் லரேடோ மறைமாவட்ட ஆயர் பொறுப்பிலிருந்து மேதகு ஜேம்ஸ் A. தமாயோ அவர்கள் சமர்ப்பித்த பணித்துறப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை,  அந்த மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, தற்போதுவரை டைலர் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றி வரும் அருள்பணி ஜான் கோம்ஸ் அவர்களை நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மே 2026, 12:26