பேராயர் சாரா முல்லாலி அவர்களுடன்  திருத்தந்தை பேராயர் சாரா முல்லாலி அவர்களுடன் திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தையுடன் பேராயர் சாரா முல்லாலி சந்திப்பு

ஏப்ரல் 27, திங்களன்று, கேன்டர்பரி உயர்மறைமாவட்டத்தின் பேராயர் சாரா முல்லாலி அவர்களைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கிறிஸ்துவின் அமைதி ஆயுதங்களற்றது என்றும், வன்முறையை அன்பால் வெல்ல வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 27, திங்களன்று, கேன்டர்பரி (Canterbury) உயர்மறைமாவட்டத்தின் பேராயர் சாரா முல்லாலி அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவினைகள் நற்செய்திப் பணிக்குத் தடையாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒற்றுமையை வளர்க்கவும் தடைகளை அகற்றவும் ஒன்றிணைந்து செயல்பட அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்தச் சந்திப்பின் போது, கத்தோலிக்க – ஆங்கிலிக்கன்  திருஅவைகளின் உறவில் மைல்கல்லாக அமைந்த திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் மைக்கேல் ராம்சே ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பை திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க – ஆங்கிலிக்கன்  திருஅவைகளுக்கு இடையிலான இறையியல் முன்னேற்றங்களையும், நிலவும் சவால்களையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  இந்த இடர்ப்பாடுகள் எதுவுமே, கிறிஸ்துவைப் பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்லும் பொதுவான நற்செய்திப் பணிக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலோடு தொடர்ந்து உரையாடல், நட்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2026, 13:11