ஐரோப்பிய மன்றத்தின் தலைவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய திருத்தந்தை!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மதங்களுக்கு இடையிலான உரையாடல், அமைதியை மேம்படுத்துதல் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் மிகவும் நலிவடைந்த சமூகங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார் .
ஏப்ரல் 29, புதன்கிழமை, ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் திரு. அன்டோனியோ கோஸ்டா அவர்களுடன் தொலைபேசி வாயிலாக இடம்பெற்ற உரையாடலின் போது திருத்தந்தை இவ்வாறு கூறியதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்த திருத்தந்தை மற்றும் ஐரோப்பிய மன்றத் தலைவரின் கலந்துரையாடலில், மேற்குக் கரை மற்றும் தெற்கு லெபனான் கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரம் குறித்துத் தனி கவனம் செலுத்தப்பட்டது.
ஏப்ரல் 13 முதல் 23 வரை அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்குத் தான் மேற்கொண்ட அண்மைக்கால திருத்தூதுப் பயணம் குறித்த தனது அனுபவங்களையும் திருத்தந்தை ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் திரு. அன்டோனியோ கோஸ்டா அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
