அங்கோலா நாட்டு மக்களுக்கு திருத்தந்தையின் ஆசீரும் நன்றியும்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 20, திங்களன்று, அங்கோலாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'லூண்டா சுல்' (Lunda Sul) மாகாணத்தின் தலைநகரமான சௌரிமோவின் எஸ்பிளனேட் மைதானத்தில் இடம்பெற்ற திருப்பலிக்கு பிறகு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கிய நன்றிச் செய்தி:
எனது இந்தப் பயணத்திற்காக மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த ஆயர்களுக்கும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் திருத்தூதுப் பயணம் இனிதே நடைபெற பெரும் முயற்சி எடுத்த அங்கோலா நாட்டு அரசு அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அங்கோலாவே, உன் கிறிஸ்தவ வேர்களில் எப்போதும் நம்பிக்கையுடன் நிலைத்திரு! அதன் வழியாகவே, ஆப்பிரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் நீதியையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு உன்னால் இன்னும் வலிமையான பங்களிப்பை வழங்க முடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
