உரோமை கொலோசியத்தில் புனித வெள்ளி சிலுவைப் பாதை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 3, வெள்ளியன்று, உரோமையிலுள்ள கொலோசியத்தில் நடைபெறும் பாரம்பரிய புனித வெள்ளி சிலுவைப் பாதை வழிபாட்டிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமை தாங்குகிறார். மேலும் இது, திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடாகும்.
கொலோசியத்தில் நடைபெறும் பாரம்பரிய இந்தச் சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள் முழுவதிலும் திருத்தந்தையே சிலுவையைச் சுமந்து செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சிலுவைப்பாதை நிகழ்விற்கான தியானச் சிந்தனைகள் அனைத்தும், புனித பூமியின் முன்னாள் பாதுகாவலர் அருள்பணியாளர் ஃபிரான்செஸ்கோ பேட்டன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரைகள் புனித வெள்ளியன்று வத்திக்கானால் வெளியிடப்படவுள்ளன.
கடந்த ஆண்டுக்கான சிலுவைப் பாதை சிந்தனைக் குறிப்புகளை முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியிருந்த நிலையில், அச்சிறப்பு வழிபாட்டை திருத்தந்தையின் சார்பாக உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பல்தசாரே ரெய்னா. அவர்கள் வழிநடத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
