தேடுதல்

திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ  

பாலஸ்தீன அதிபருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

பாலஸ்தீனத்தில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இடம்பெற்றுள்ள இந்தத் தொலைபேசி உரையாடல், உலகளாவிய கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் நாடுகளுக்கிடையேயான உரையாடலின் தொடர்ச்சியான தேவையைக் கோடிட்டுக்காட்டியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மார்ச் 16, திங்களன்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களுடன் தொலைபேசி வாயிலாகத் இடம்பெற்ற உரையாடலின்போது, பாலஸ்தீனத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், அமைதியை நிலைநாட்டுவதில் திருப்பீடத்தின் அசைக்க முடியாத ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 16, திங்களன்று இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழல் குறித்தும் மோசமடைந்து வரும் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் பாலஸ்தீன அதிபருடன் ஆலோசித்தார் திருத்தந்தை.

"அனைத்துலக சட்டத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்" என்றும் குறிப்பாக "இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இவைகள்தாம் நீதி மற்றும் நிலையான தீர்வை நோக்கிய இன்றியமையாத நடவடிக்கைகளாக அமைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை, அனைத்துலக செயல்பாட்டாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் தேவையையும், மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பிற்கான மரியாதையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இடம்பெற்றுள்ள இந்தத் தொலைபேசி உரையாடல், உலகளாவிய கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் நாடுகளுக்கிடையேயான உரையாடலின் தொடர்ச்சியான தேவையைக் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2026, 13:33