திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ  

நல்ல சமாரியரைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவுங்கள்!

இவ்வமைப்பின் 50-ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்களின் நிறைவுவிழாவையொட்டி, மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று, அந்த அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸியா கெல்லி (Alexia Kelley) ஆகியோருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை .

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமெரிக்காவையும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் கத்தோலிக்க நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (FADICA) என்ற அமைப்பின் 50 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இவ்வமைப்பின் 50-ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்களின் நிறைவுவிழாவையொட்டி, மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று, அந்த அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச்  செயல் அதிகாரி அலெக்ஸியா கெல்லி (Alexia Kelley) ஆகியோருக்கு  அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை .

மேலும் இச்செய்தியில், உரோமை தலைமைச் செயலகத்திற்கு அந்த அமைப்பு அளித்து வரும் உதவிகளுக்காகவும், சமூக நீதி, கத்தோலிக்க கல்வி, மனித மாண்பு மற்றும் நலிந்தோர் மீதான அக்கறை ஆகியவற்றை ஊக்குவிக்கும் திட்டங்களில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காகவும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் திருத்தத்தை.

இந்த ஆண்டு விழாக் கூட்டம் கிறிஸ்தவத் தவக்காலத்தின்போது இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள 'நல்ல சமாரியர்' உவமையை மனதிற்கொண்டு, தேவையில் இருப்பவர்களுக்குத் தாராள மனதுடனும் இரக்கத்துடனும் தொடர்ந்து பணிகள் ஆற்றுமாறு அவர்களை ஊக்குவித்துள்ளார்.

தொடர்ந்து அவர்களுடைய இந்த அர்ப்பணிப்புள்ள முயற்சிகள், மற்றவர்களுக்கும் சேவையின் வழியாக கிறிஸ்துவைச் சந்திக்க ஒரு தூண்டுதலாக அமையும் என்று தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, அதன் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது இறைவேண்டலை உறுதி அளித்து, தனது அப்போஸ்தலிக்க  ஆசீரையும்  அவர்களுக்கு வழங்கி தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2026, 13:00