மொனாக்கோவில் திருத்தந்தை 14-ஆம் லியோ!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 28, சனிக்கிழமை ஒருநாள் திருத்தூதுப் பயணமாக மொனாகோவிற்குச் சென்றுள்ளார். யோவான் நற்செய்தியில் வரும், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (காண்க. யோவா 14:6) என்ற இறைவார்த்தைகளை இந்தத் திருத்தூதுப் பயணத்திற்கான விருதுவாக்காகக் கொண்டு அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மார்ச் 28, சனிக்கிழமையன்று காலை உரோமை உள்ளூர் நேரம் 07.20 மணிக்கு அதாவது, இந்திய, இலங்கை நேரம் காலை 11.50 மணிக்கு வத்திக்கானிலிருந்து உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் புறப்பட்டுச் சென்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சரியாக 01 மணிநேரம் 40 நிமிடங்கள் பயணித்து காலை 9:00 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் நண்பகல் 01.30 மணிக்கு மொனாக்கோ உலங்கு வானூர்தித் தளத்திற்கு (helicopter) உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் வந்தடைந்தார் திருத்தந்தை. அவரை மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபெற்று வருகிறார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
